அண்ணா மேம்பாலம்
அண்ணா மேம்பாலம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் மையப் பகுதியில் அண்ணா சாலையில் அமைந்துள்ள மேம்பாலம் ஆகும். 1973 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இது சென்னையில் கட்டப்பட்ட முதல் மேம்பாலமும், இந்தியாவிலேயே மூன்றாவதாக கட்டப்பட்ட மேம்பாலமும் ஆகும். இது கட்டப்பட்ட போது இந்தியாவிலேயே நீண்ட பாலமாகத் திகழ்ந்தது. அண்ணா சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இப்பாடலம் கட்டப்பட்டது. ஜெமினி ஸ்டூடியோஸ் இங்கு அமைந்திருந்ததால் இப்பகுதி ஜெமினி சர்க்கிள் எனவும் இங்கு கட்டப்பட்ட மேம்பாலம் ஜெமினி மேம்பாலம் எனவும் அழைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் குதிரைப் பந்தயத்தைத் தடை செய்ததை நினைவுகூரும் வகையில் குதிரையை அடக்கும் வீரனின் சிலைகள் மேம்பாலத்ததின் கீழே இரு பக்கங்களிலும் அமைக்கபட்டன. அமைக்கப்பட்டது. ஒரு மணி நேரத்தில் ஏறத்தாழ 20,000 வாகனங்கள் இப்பாலத்தின்வழி செல்கின்றன. ஏர்செல் செல்லுலர் நிறுவனம் இப்பாலத்தைப் பராமரிக்கத் திட்டமிட்டு, பாலத்தில் ஒளி விளக்குகளை நிறுவி பராமரித்தது.




